Home> Health
Advertisement

உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? பயிற்சியாளர் சொல்லும் 20 டிப்ஸ்!

உடல் எடையை குறைக்க பயிற்சியாளர் லியாம் டோஃபாம் என்பவர், 20 டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார். 

உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? பயிற்சியாளர் சொல்லும் 20 டிப்ஸ்!

உடல் எடையை குறைக்க சிலர் என்னதான் போராடினாலும் உடல் எடையானது குறைந்தபாடாக இருக்காது. அவர்கள் ஏதேனும் ஒரு தவறுகளை செய்வார்கள், அதனால் அவர்களின் உடல் எடையை குறைக்க முடியாமல் இருக்கும். அப்படி உடல் எடையை குறைக்க கஷ்டப்படுபவர்களுக்கு பயிற்சியாளர் சொல்லும் 20 டிப்ஸ் இங்கே. 

கடுமையான எடை மாற்றத்தை சந்தித்த உடற்பயிற்சி பயிற்சியாளர் லியாம் டோஃபாம் , தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உடற்பயிற்சி மற்றும் உணவு முறை குறிப்புகளை பகிர்ந்துள்ளார். அவர் முறையாக 20 பழக்கங்களை பின்பற்றி உள்ளார். அதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைத்துள்ளார். 

1) தினமும் முட்டை சாப்பிடுங்கள் 

அவை கொழுப்பு இழப்பை எளிதாக்கும் ஒரு சூப்பர்ஃபுட் என பயிற்சியாளர் லியாம் டோஃபாம் தெரிவித்துள்ளார். 

2) மது அருந்துவதைக் குறைக்கவும் 

உங்கள் எடை இழாப்பு இலக்கை அடையும் வரை, மது அருந்துவதைக் குறைக்கவும். 

3) பிளாக் டீ குடிக்கவும்

இது உங்கள் பசியை அடக்கி, உங்களை திருப்தியாக வைத்திருக்கும்.

4) இரவு உணவுக்கு பிறகு எதுவும் சாப்பிட வேண்டாம்

இரவு உணவுக்கு பின்னர் நீங்கள் எதையும் சாப்பிட வேண்டாம். பல் துலக்கிவிட்டு தூங்குங்கள். 

5) நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதைத் தவிர்க்கவும்

சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதை தவிர்க்கவும். 

6) ஓடுவதை நிறுத்தவும் 

நீங்கள் ஓடுவதை நிறுத்திவிட்டு, தினமும் 10,000 அடிகளை எடுத்து வையுங்கள். 

7) வேர்க்கடலை வெண்ணெயைத் தவிர்க்கவும்

இதில் கலோரிகள் அதிகம், புரதம் குறைவு. எனவே இதனை தவிர்க்கவும். 

8) உணர்வுடன் சாப்பிடுங்கள்

சாப்பிடுவதற்கு முன், உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: "எனக்கு சலிப்பு, தாகம் அல்லது மன அழுத்தம் இருக்கிறதா?" ஆம் என்றால், சாப்பிட வேண்டாம்.

9) உங்கள் உடலை மதிப்பிடுவதை நிறுத்துங்கள்

உங்கள் உடலை 10 இல் 5 க்கும் குறைவாக மதிப்பிட்டால், அந்த எதிர்மறை உணர்ச்சிகளைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கவும்.

10) திருப்திகரமான உணவுகளை உண்ணுங்கள்

இறைச்சி, கோழி மற்றும் கடல் உணவுகளை உங்கள் முதன்மை புரத மூலங்களாக ஆக்குங்கள்.

11) பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுங்கள்

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுங்கள். இது உங்களுக்கு தேவையாக புரதம் மற்றும் நார்ச்சத்தை தரும். 

12) மசாலாப் பொருட்களில் கவனமாக இருங்கள்

குறைந்த கலோரி/பூஜ்ஜிய கலோரி கொண்ட மசாலாப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளைப் பயன்படுத்துங்கள்.

13) பீட்சா, பர்கர்களை தவிர்க்கவும் 

பீட்சா, பர்கர்கள் மற்றும் சாக்லேட் சாப்பிடுவது நல்லது. ஆனால் எல்லா நேரங்களிலும் அல்ல.

14) போலி இறைச்சியை ஒருபோதும் சாப்பிடாதீர்கள் 

போலியான இறைச்சியை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். அது உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும். 

15) தீவிர உணவுக் கட்டுப்பாட்டைத் தவிர்க்கவும்

உங்கள் வாழ்க்கையை வெறுக்க விரும்பினால் தவிர, கீட்டோ அல்லது கார்னிவோர் போன்ற முழு உணவுக் குழுக்களையும் நீக்கும் எந்த தீவிர உணவுமுறைகளையும் செய்யாதீர்கள்.

16) ஆரோக்கியமான பரிமாற்றங்களைச் செய்யுங்கள்

வழக்கமான சோடாவை டயட் சோடாவுடன் மாற்றுவது கலோரி மற்றும் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பதற்கான ஒரு வழியாக இருக்கலாம், இது எடை மேலாண்மைக்கு உதவும், ஆனால் இது உலகளாவிய ஆரோக்கியமான தேர்வு அல்ல.

17) திங்கள் முதல் வெள்ளி வரை ஒரே மாதிரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். வார இறுதியில் மட்டும் மாற்றிக்கொள்ளுங்கள். 

18) தினமும் 45 முதல் 60 நிமிடங்கள் எடையை தூக்குங்கள். 

மேலும் படிங்க: ஜிம்முக்கு போகாமல் 35 Kg-ஐ குறைத்த நபர்... கொழுப்பை கரைக்க அவர் குடித்த 7 பானங்கள்

மேலும் படிங்க: சமையலுக்கு கல் உப்பு பயன்படுத்துவோர் கவனத்திற்கு...! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More