டெஸ்ட் அரங்கில் அதிக ரன்களை அடித்தவர்கள்... டாப் 7 பட்டியல் இதோ!
Sudharsan G
Jul 08, 2025
Sudharsan G
7. எல் ஹட்டன் இங்கிலாந்து வீரரான இவர் 1938ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 364 ரன்களை அடித்தார்.
6. கார்ஃபீல்ட் சோபர்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான இவர் 1958ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக கிங்ஸ்டனில் நடந்த டெஸ்ட் போட்டியில் 365* ரன்களை அடித்தார்.
5. வியான் முல்டர் தென்னாப்பிரிக்கா அணி கேப்டனான இவர் தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்பேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 367* ரன்களை அடித்தார். ஒரு டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அதிக ரன்களை அடித்தவர் இவர்தான்.
4. மஹேல ஜெயவர்தனே இலங்கை வீரரான இவர் 2006ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் 374 ரன்களை குவித்தார்.
3. பிரையன் லாரா மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான இவர் 1994ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக செயின்ட் ஜான்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 375 ரன்களை குவித்தார்.
2. மேத்யூ ஹேடன் ஆஸ்திரேலிய வீரரான இவர் 2003ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 380 ரன்களை குவித்தார்.
1. பிரையன் லாரா மேற்கு இந்திய தீவுகள் அணி வீரரான இவர் 2004ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரா செயின்ட் ஜான்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 400* ரன்களை குவித்தார்.