Home> Health
Advertisement

20 கிலோவை 3 மாதங்களில் குறைத்த பெண்... இந்த 10 டிப்ஸ்களை பலோ பண்ணுங்க!

Weight Loss Journey: 3 மாதங்களில் 20 கிலோ உடல் எடையை குறைக்க 10 டிப்ஸ்களை பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார். அவரின் உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு காணலாம்.

20 கிலோவை 3 மாதங்களில் குறைத்த பெண்... இந்த 10 டிப்ஸ்களை பலோ பண்ணுங்க!

Weight Loss Journey: இன்ஸ்டாகிராமில் பலரும் உடல் எடை குறைப்பு சார்ந்து ரீல்ஸ்களை பதிவிடுவதை பார்க்க முடிகிறது. இதில் இன்ஸ்டாகிராம் பிரபலங்களும் அடக்கம்.

Weight Loss Journey: அனிதா ராயின் உடல் எடை குறைப்பு பயணம்

அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள ஃபிட்னஸ் பயிற்சியாளராக அறியப்படும் அனிதா ராய் என்பவரும் தொடர்ந்து உடல் எடை குறைப்பு குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இவரை 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். கொழுப்பை கரைக்கும் உடற்பயிற்சிகள் முதல் அவரின் அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களை அவர் பதிவிட்டு வருகிறார். 

Weight Loss Journey: 3 மாதங்களில் 20 கிலோவை குறைக்கலாம்

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி உடல் எடை குறைப்புக்கான 10 டிப்ஸ்களை அவர் பகிர்ந்துள்ளார். "3 மாதங்களில் 20 கிலோ உடல் எடையை குறைக்க 10 டிப்ஸ்கள் இதோ..." என அவர் பகிர்ந்திருந்தார். அதுகுறித்து இங்கு காணலாம்.

Weight Loss Journey: உடல் எடையை குறைக்க 10 டிப்ஸ்

1. மசாலப் பொருள்கள்: உங்கள் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தவும், உடல் எடை குறைப்பை துரிதப்படுத்தவும், கெய்ன் மிளகு, மஞ்சள், இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்களை உணவில் அதிகம் பயன்படுத்துங்கள்.

2. புரதம் முக்கியம்: கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவதை விட, முதலில் புரதச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகளை சாப்பிடுங்கள். இது உங்களின் வயிறை நிறைவடையச் செய்யும். அதன்மூலம், நீங்கள் அடுத்து சாப்பிடும் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைவாகவே எடுத்துக்கொள்வீர்கள். 

3. உணவுக்கு முன் தண்ணீர்: உணவை சாப்பிடுவதற்கு 5-10 நிமிடங்களுக்கு முன்பு எப்போதும் தண்ணீர் குடிக்கவும். இது உங்கள் பசியை கட்டுப்படுத்தும். மேலும், நீங்களும் அளவாக சாப்பிடுவீர்கள். 

4. சிறிய பாத்திரங்கள்: உங்கள் உணவு சாப்பிடும்போது பரிமாறும்போது எப்போதும் சிறிய தட்டுகள் / கிண்ணங்களையே பயன்படுத்துங்கள். இதனால், உங்களின் மூளையே அதற்கு பழகிவிடும். அதாவது, உணவு அதிகமாக இருக்கும், இதனால் நீங்கள் உங்களின் வயிறும் நிறையும்.

5. குறைந்த கலோரி: முக்கியமாக தினமும் குறைந்த கலோரியை எடுத்துக்கொள்ளவும். அதிலும், அதிக புரத உணவுகளை எடுத்துக்கொள்ளவும். ஏனெனில் அவை உங்களின் வயிறும் எளிதில் நிறைந்துவிடும். குறைந்த அளவில் கலோரியை உட்கொள்வதன் மூலம் உடல் எடை குறைப்புக்கு எளிதாக இருக்கும். 

6. சுகருக்கு நோ சொல்லுங்க: சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். இதன்மூலம், உங்கள் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பு குறைய தொடங்கும். 

7. வெயிட் மிஷினில் உள்ள சிக்கல்: உடல் முன்னேற்றத்தைக் கண்காணிக்க பழைய படங்கள், பழைய ஆடைகளை பயன்படுத்துங்கள். உடல் சார்ந்த அளவீடுகளைப் பயன்படுத்தவும்; அவை எப்போதும் துல்லியமாக இருக்கும். வெயிட் மெஷின் ஏற்ற இறக்கமாக இருக்கும். அதை நம்பி நீங்கள் நம்பிக்கை இழந்து உங்கள் முயற்சியை நிறுத்த வாய்ப்புள்ளது.

8. 80/20 விதியை முயற்சியுங்கள்: நீங்கள் 80% ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். மேலும் 20% உங்களுக்கு பிடித்த (Cheat) உணவை உட்கொள்ளலாம். இந்த பயிற்சி உங்கள் உணவுப்பழக்கவழக்கத்தில் சீராக இருக்க உதவும். இது உங்கள் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். 

9. Strength பயிற்சி: வாரத்தில் 2-3 நாள்கள் strength பயிற்சிகளை மேற்கொள்ளவும். இது தசை வளர்ச்சியை அதிகரிக்கும். ஓய்வில் இருக்கும்போது கூட கலோரிகளை குறைக்க உதவும்.

10. தொடர்ச்சியாக பயணியுங்கள்: உடல் எடை குறைப்பு என்பது ஒரு பயணம், உண்மையான மற்றும் நீடித்த முடிவுகளைப் பார்ப்பதற்கான ஒரே வழி சீராக இருப்பதன் மூலமும் சரியானதாக இல்லாமல் இருப்பதன் மூலமும் மட்டுமே.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் அனிதா ராய் என்பவரின் உடல் எடை குறைப்பு குறித்த தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க |  120 கிலோ உடல் எடையுடன் இருந்த விஜய் சேதுபதி மகன்... இப்ப எப்படி ஆயிட்டார் பாருங்க!

மேலும் படிக்க | 49 கிலோவை குறைத்த பெண்... உடல் எடையை குறைக்க அவருக்கு உதவிய 5 பழக்கவழக்கங்கள்!

மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? பயிற்சியாளர் சொல்லும் 20 டிப்ஸ்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More