Home> Health
Advertisement

ஜிம் பக்கமே போகாமல்... 18 கிலோவை குறைத்த பெண் - அவர் கொடுத்த '7' நச் டிப்ஸ்

Weight Loss Journey: இன்ஸ்டாகிராமில் பிரபலமான பெண் ஒருவர் இந்த 7 டிப்ஸ்களை பின்பற்றி 18 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவரது உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு காணலாம். 

ஜிம் பக்கமே போகாமல்...  18 கிலோவை குறைத்த பெண் - அவர் கொடுத்த '7' நச் டிப்ஸ்

Weight Loss Journey: ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என்பதே உடல் எடை குறைப்பின் அடிப்படையான கூறு எனலாம். உடல் எடை குறைப்புக்கான உடனடி நிவாரணிகள், பட்டினி கிடப்பது, ஆடம்பரமான உடற்பயிற்சி திட்டங்கள் ஆகிய குறுக்கு வழிகள் ஏதும் நீண்ட கால பலனை அளிக்காது. அது ஆரோக்கியமற்றது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

Weight Loss Journey: உடல் எடையை குறைக்க 7 டிப்ஸ்

ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு சின்ன சின்ன மாற்றங்களே போதுமானது, ஆனால் இந்த மாற்றத்தை நீங்கள் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும். இதன்மூலம் உடல் எடை குறைப்பை சாத்தியப்படுத்தலாம். அந்த வகையில், ஆர்யா ஆரோரா என்பவர் ஜிம்முக்கு போகாமலும், எவ்விதமான ஆடம்பர உணவுமுறையை பின்பற்றாமலும் வீட்டில் இருந்தே 18 கிலோவை குறைத்துள்ளாராம். மேலும் உடல் எடை குறைப்பில் தனது இலக்கை எட்டுவதற்கு உதவிய 7 டிப்ஸ்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aryaa Arora (@wutaryaadoin)

Weight Loss Journey: BMR-ஐ முதலில் கண்டுபிடியுங்கள்

நீங்கள் உடல் எடை குறைப்புக்கு ஒரு உணவுப் பழக்கவழக்கத்தை தொடர்வதற்கு முன்னர் உங்கள் உடலுக்கு ஒருநாள் எவ்வளவு கலோரிகள் தேவைப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஆர்யா. அதனை அவர் ChatGPT உதவியுடன் கண்டறிந்துள்ளார். அவர் ChatGPT-இல் அவரது எடை, உயரம், வயது, பாலினம் அனைத்தையும் உள்ளீடு செய்து, "what's my BMR and Calorie Intake for weight loss?" என கேட்டுள்ளார். 

அதில் நீங்கள் தினமும் எவ்வளவு கலோரியை எடுத்துக்கொள்ள வேண்டும் என காட்டும். நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுகளின் கலோரிகளை கணக்கிட்டு, கலோரி பற்றாக்குறையை பின்பற்ற வேண்டும். உதாரணத்திற்கு தினமும் 2000 கலோரிகள் தேவைப்பட்டால் அதை விட குறைந்த கலோரிகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். 

Weight Loss Journey: சமமான ஊட்டச்சத்து

ஆர்யா எந்த ஊட்டச்சத்தையும் ஒதுக்கவில்லையாம். அவரது ஒவ்வொரு வேளை உணவிலும் 40% புரதம், 30% நார்ச்சத்து, 20% கார்போஹைட்ரேட்ஸ், 10% கொழுப்பு என இருக்குமாம். வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதே முக்கியம் என்கிறார். 

Weight Loss Journey: உடற்பயிற்சியில் இது முக்கியம்

வாரத்தில் 4 நாள்களுக்கு Strength பயிற்சி தேவை. 2 நாள்கள் கார்டியோ பயிற்சி மேற்கொள்ளுங்கள். தினமும் நடப்பதையும் வாடிக்கையாக வைத்திருங்கள். இது தசையை வளர்ச்சியடைய வைத்து, கொழுப்பு குறைவை வேகப்படுத்தும். 

Weight Loss Journey: கலோரியை கவனியுங்கள்

நான் எனது உணவின் கலோரிகளை கண்காணித்து வந்தேன். அதுவும் தொடர்ச்சியாக... அதாவது தான் என்ன சாப்பிடுகிறோம் என்பதை உணர இது உதவுமாம். 

Weight Loss Journey: 80:20 விதி

ஆர்யா 80:20 விதிமுறையை பின்பற்றி உள்ளார். பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெளிப்புற உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மாவு, எண்ணெய், வறுத்த நொறுக்குத் தீனிகளை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் அவ்வப்போது சாப்பிட்டு அதில் சமநிலையை கடைபிடித்துள்ளார். 

Weight Loss Journey: தண்ணீரும் தூக்கமும்...

தண்ணீர் குடிப்பதையும், தூங்குவதையும் உங்களின் வேலையை போல் செய்யுங்கள் என்கிறார். தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். 7-8 மணிநேரம் தூங்க வேண்டும். இதை தொடர்ச்சியாக கடைபிடித்தால் உங்களின் உடல் ஆற்றலும், செரிமானமும், பசியும் கட்டுப்பாட்டுடன் இருக்கும், முன்பை விட பெரிய வித்தியாசம் தெரியும். 

Weight Loss Journey: மனநலனும் முக்கியம்

உடல் எடை குறைப்புக்கு மனநலனும் முக்கியம் என்கிறார் ஆர்யா. இதற்காக அவர் ஆர்யா தினமும் டைரி எழுதுவாராம், தியானம் செய்வாராம். மனதை அமைதியாக வைத்திருப்பதே தினமும் தொடர்ச்சியாக இயங்கி நீண்டகால பலனை பெற முடியும் என அவர் நம்புகிறார். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஆர்யா ஆரோரா என்பவரின் தனிப்பட்ட கருத்தாகும். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 32 கிலோ உடல் எடையை குறைத்த பெண்... இந்த 5 விதிகளை சரியா பலோ பண்ணனும்...!

மேலும் படிக்க | 20 கிலோவை 3 மாதங்களில் குறைத்த பெண்... இந்த 10 டிப்ஸ்களை பலோ பண்ணுங்க!

மேலும் படிக்க | 49 கிலோவை குறைத்த பெண்... உடல் எடையை குறைக்க அவருக்கு உதவிய 5 பழக்கவழக்கங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More