Weight Loss Journey: ஐஎஸ்எஸ் தரச் சான்றிதழ் பெற்ற ஊட்டச்சத்து நிபுணரும், உடல் எடை குறைப்பு பயிற்சியாளருமான ரக்ஷா பாலாவி தனது உடல் எடை குறைப்பு அனுபவம் குறித்து அவரது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் பிரபலமாகவும் அறியப்படுகிறார். இப்போது அவருக்கு 5000க்கும் மேற்பட்ட பாலோயர்கள் உள்ளனர்.
Weight Loss Journey: 13 மாதங்களில் 40 கிலோ குறைப்பு
இவர் உடல் பருமனால் மட்டும் பாதிக்கப்படவில்லை. சமரு பிரச்னைகள், தலைமுடி பிரச்னைகளையும் சந்தித்துல்ளார். குறிப்பாக இவரது உடல் பருமனுக்கு முக்கிய காரணம், இவர் துரித உணவுகளை அதிகமாக சாப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக சிப்ஸ் மற்றும் சாக்லேட்டை தினமும் சாப்பிட்டு வந்துள்ளார். இதையடுத்து, இவர் உடல் எடையை குறைக்க முடிவெடுத்துள்ளார். உடல் எடை குறைப்புக்கான செயல்பாட்டை தொடங்கி 13 மாதங்களில் 40 கிலோவை குறைத்துள்ளார். அதாவது, 116 கிலோவில் இருந்து சுமார் 70 கிலோவுக்கு வந்துள்ளார்.
Weight Loss Journey: 3 தவறுகளால் உடல் பருமன்
இதுகுறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டா ரிலீஸ் 90 லட்சம் வியூஸை தாண்டியுள்ளது. எவ்விதமான கடுமையான உணவுக் கட்டுபாடும், குறுக்கு வழியும் இன்றி உடல் எடையை குறைத்துள்ளார். ஊட்டச்சத்தை புரிந்துகொண்டு, ஆரோக்கியமற்ற உணவுகளை கைவிட்டு, தொடர்ச்சியாக வீட்டில் உடற்பயிற்சியை மேற்கொண்டு உடல் எடை குறைப்பை மேற்கொண்டுள்ளார்.
மேலும், அவர் எப்படி உடல் பருமனை அடைந்தார் என்பது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டார். பள்ளிக் காலகட்டத்தில் இவர் செய்த 3 தவறுகளால்தான் உடல் பருமனாகி உள்ளது. இந்த 3 தவறுகளை மாணவர்கள் செய்யக்கூடாது என அவர் அறிவுறுத்துகிறார்.
Weight Loss Journey: துரித உணவுகள் வேண்டாம்
ரக்ஷா தினமும் பள்ளியில் 2-3 பரோட்டாகள், சிப்ஸ் ஆகியவற்றை மதிய உணவாக சாப்பிடுவாராம். இதில் அதிக கார்போஹைட்ரேட்ஸ், அதிக கொழுப்பு உள்ளன. இதனால் தொப்பை கொழுப்பு அதிகரிக்கும். எனவே, பள்ளியில் மதிய உணவாக நார்சத்து கொண்ட பழங்கள், முட்டைகள் அல்லது புரதச்சத்திற்கு பன்னீர், முழு தானிய ரொட்டி அல்லது பிரெட் போன்றவற்றை சாப்பிடலாம்.
Weight Loss Journey: நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும்
மேலும், வீட்டில் படிக்கும்போது சிப்ஸ், பலகாரங்கள், பிஸ்கட்டுகள் போன்றவற்றை சாப்பிடுவாராம். இதில் அதிக உப்பு, அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளாகும். இவற்றை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். எனவே இவற்றுக்கு பதில் பழங்கள் அல்லது மக்கானா ஆகியவற்றை சாப்பிடலாம் என்கிறார்.
Weight Loss Journey: வெளியே சென்று விளையாடுங்கள்
மேலும் பள்ளிக் காலத்தில் எப்போதும் தொலைக்காட்சி பார்ப்பது, மொபைலில் விளையாடுவது, வீட்டுப்பாடம் செய்வது என எவ்வித உடல் உழைப்பும் இல்லாத காரணத்தினால் உடல் எடையை அதிகரித்ததாம். எனவே மாணவர்கள் நிச்சயம் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்றும் குறைந்தபட்சம் தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தையாவது பின்பற்ற வேண்டும் என்கிறார் ரக்ஷா. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சீராக்கும்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இவற்றையெல்லாம் நான் ரொம்ப தாமதமாகவே தெரிந்துகொண்டேன். ஆனால் இதை இப்போது பகிர்ந்துகொள்கிறன். இதையே திருப்பி செய்யாதீர்கள். இப்போது நான் பழங்கள், மக்கானா சாப்பிடுகிறேன், தொடர்ச்சியான உடற்பயிற்சிகளை செய்கிறேன்" என்றார். ஆரோக்கியமான உணவுகள், தொடர்ச்சியான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு திரும்பி உள்ளார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ரக்ஷா பாலாவி தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 28 நாள்களில் சிக்குனு மாற்றலாம்... உடல் எடையை குறைக்க முக்கிய 7 பழக்கங்கள்!
மேலும் படிக்க | 55 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகர்.. இந்த 3 விஷயங்கள்தான் காரணம்!
மேலும் படிக்க | 90 கிலோவில் இருந்த பெண்... 65 கிலோவுக்கு வர அவருக்கு உதவிய டிப்ஸ் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ