Weight Loss Journey: உடல் எடையை குறைப்பது எளிமையான காரியம்தான். ஆனால் அதை அவ்வளவு சாதாரணமாக செய்துவிட முடியாது. தெளிவான திட்டம், தொடர்ச்சியான செயல்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவை இருந்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும்.
Weight Loss Journey: 8 மாதங்களில் 40 கிலோவை குறைத்த நபர்
அந்த வகையில், ரோஹன் சேதி என்பவர் 8 மாதங்களில் சுமார் 40 கிலோ உடல் எடையை குறைத்துள்ளாராம். 114 கிலோவில் இருந்து அவர் 74 கிலோவில் தற்போது இருக்கிறாராம். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஜூன் 25ஆம் தேதி போட்ட பதிவில், அவர் உடல் எடை குறைப்பை சாத்தியப்டுத்தினார் என்பதை விளக்கி உள்ளார். அவற்றை இங்கு காணலாம்.
Weight Loss Journey: ஆரோக்கியமாக சாப்பிடுவது மட்டும் போதாது...
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது குறத்து பேசிய அவர், "நீங்கள் கிரில் சிக்கன், ஓட்ஸ் ஆகிய ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், ஆனால் நீங்கள் கலோரியை தினமும் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உடல் கொழுப்பு குறையாது. அதாவது ஆரோக்கியமாக சாப்பிட்டேன், ஆனால் அதிகமாக சாப்பிட்டேன். எப்போது எனது நான் சாப்பிடும் கலோரிகளை கண்காணிக்க தொடங்கினேனோ, அப்போது என் கொழுப்பு குறைய தொடங்கியது" என்கிறார்.
Weight Loss Journey: பளூ தூக்குதலும் முக்கியம்
ரோஹன் வாரத்திற்கு 5 முறை பளூ தூக்குதலை மேற்கொண்டதுதான் உடல் எடை குறைப்பில் பெரியளவில் உதவியது என்கிறார். கார்டியோ கொழுப்பை குறைக்க உதவியது என்றாலும், பளூ தூக்குதல்தான் தசைகளை வளர்ச்சியடைய வைத்தது. தசைகள்தான் உடலுக்கான வடிவத்தை கொடுக்கும். அது இல்லாவிட்டால் மென்மையாகவும், தளர்வாகவும் உடல் இருக்கும் என்கிறார்.
Weight Loss Journey: அதிக நடைப்பயிற்சிகள் வேண்டும்
ரோஹன் தினமும் அதிகமாக உடற்பயிற்சிகளை செய்ய மாட்டாராம். ஆனால், தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸை நடந்துவிடுவாராம். இதுதான் அவருக்கு கைக்கொடுத்ததாம். "தினமும் 2 முறை உடற்பயிற்சி செய்ய நேரமில்லை. ஆனால், நடப்பதற்கு நேரம் இருந்தது. அதனால் தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் மேல் நடப்பேன். இது கலோரிகளை எரிக்க உதவும், வலியும் பெரிதாக எடுக்காது. பசியை கட்டுக்குள் வைத்தது. கொழுப்பு குறைய நடப்பதே சிறந்த வழி" என்கிறார்.
Weight Loss Journey: தொடர்ந்து செயல்படுங்கள்
மேலும் எப்போதும் எதாவது ஊக்கமளித்துக்கொண்டே இருக்க வேண்டும் என நினைக்காமல் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்கிறார். அதுமட்டுமின்றி, உடல் எடையை சோதிக்கும்போது எடை குறையவில்லை என்றால் பதறவேண்டாம் என்றும் கூறுகிறார்.
"நான் விஷயங்களை செய்தும் உடல் எடை குறையவில்லை, அப்படியே இருந்தது. நான் பதறவில்லை. நான் இன்னும் இயங்கினேன். நன்றாக தூங்கினேன். கலோரிகளை கூடுதலாக கவனித்தேன். கொழுப்பு குறைவு நேர்கோட்டில் நடக்காது, ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் அந்த இடத்தில் பலரும் விட்டுவிடுவார்கள், நான் விடவில்லை" என்கிறார். இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் அவரது உடல் எடை குறைப்புக்கு உதவியிருக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ரோஹன் சேதியின் தனிப்பட்ட அனுபவங்களாகும். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 116 கிலோவில் இருந்த பெண்... 40 கிலோ எடையை குறைத்தது எப்படி? 3 முக்கிய டிப்ஸ் இதோ!
மேலும் படிக்க | 28 நாள்களில் சிக்குனு மாற்றலாம்... உடல் எடையை குறைக்க முக்கிய 7 பழக்கங்கள்!
மேலும் படிக்க | 55 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகர்.. இந்த 3 விஷயங்கள்தான் காரணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ