Weight Loss Journey: உடல் பருமன் ஆரோக்கியமற்ற வாழ்வின் ஒரு அறிகுறி எனலாம். சிலருக்கு வாழ்க்கைமுறை பிரச்னையாகவோ அல்லது மோசமாக இருப்பதாலோ உடல் பருமன் பிரச்னை இருக்கும். இருப்பினும் சிலர் மரபணு ரீதியிலாக கூட உடல் பருமனோடு இருப்பார்கள். எதுவாகினும் ஒருவரை உடல் பருமனை வைத்து கேலிக்குள்ளாக்குவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது இல்லை.
Weight Loss Journey: 90 கிலோவில் இருந்து 65 கிலோ
பாவமாக, பரிதாபமாக பார்ப்பதும் சரி, 'அக்கறை' கொண்டு கேட்கும் கேள்விகளும் சரி நிச்சயம் அவர்களை காயப்படுத்தும். எனவே, உடல் பருமனோடு இருப்போருடனும் இயல்பாக இருப்பதே சரியானது எனலாம். இருப்பினும் உடல் பருமனோடு இருக்கும் சிலர் இதுபோன்ற பல கேலிகள், கேள்விகள், கடினமான பிரச்னைகளையும் தாண்டி வந்திருப்பார்கள். அந்த வகையில், 90 கிலோவில் இருந்த இளம்பெண் ஒருவர் தற்போது 65 கிலோ எடையை குறைத்துள்ளார். சிறுவயதில் இருந்தே நண்பர்கள், உறவினர்கள், ஏன் பெற்றோர் உள்பட பலரின் கேள்விகளால் காயமடைந்த இந்த பெண் தீவிர முயற்சியின் பேரில் இந்த உடல் எடையை குறைத்திருக்கிறார்.
Weight Loss Journey: Intermittent Fasting
Reddit தளத்தின் Fit India பகுதியில் தனது இந்த பெண் தனது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து பதிவிட்டுள்ளார். இதில் உடல் எடை குறைப்புக்கு அவர் மேற்கொண்ட வாழ்க்கைமுறை மாற்றங்களை அதில் விரிவாக கூறியிருந்தார். 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உடல் எடை குறைப்புக்கு பல்வேறு நடவடிக்கையில் இருந்துள்ளார். மேலும், Intermittent Fasting செய்ய முடிவெடுத்துள்ளார். 2020ஆம் ஆண்டு மே மாதம் அவர் 10 கிலோவை குறைத்திருக்கிறார். தொடர்ச்சியான செயல்பாட்டின் மூலம் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவர் திட்டமிட்டபடி 65 கிலோவுக்கு வந்துள்ளார்.
Weight Loss Journey: 2020 டூ 2021 - உடல் எடை குறைப்பு பயணம்
ஆனால், அந்த நேரத்தில் அவர் மிகவும் மெலிந்துவிட்டாராம். தசைகளை இழந்துள்ளார். மேலும் மிகவும் பலவீனமாகவும் உணர்ந்துள்ளார். இதுகுறித்து அவரது Reddit பதிவில், "Intermittent Fasting குறித்து ஆய்வு செய்து 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து அதை பின்பற்ற தொடங்கினேன். மே மாதத்திலேயே 10 கிலோ குறைந்துவிட்டேன். 90 கிலோவில் இருந்த நான் 2021ஆம் ஆண்டு ஆக்ஸட் மாதத்தில் 65 கிலோவுக்கு வந்துவிட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தசை இழப்பு ஏற்பட்டது, மிகவும் பலவீனமாக உணர்ந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
Weight Loss Journey: ஜிம் பயிற்சி...
அதன்பின் பலமாவதற்கு அவர் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். Strength பயிற்சிகளில் கவனம் செலுத்த தொடங்கி உளஅளார். இதற்காக அவர் பளு தூக்குத்ல் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு, ஜிம்மிலும் தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். இதையடுத்து அவரது உடலும் வளரத்தொடங்கி உள்ளது. ஒருகட்டத்தில் அவர் ஜிம்முடன் மிக நெருக்கமாக உணர தொடங்கிவிட்டாராம்.
Weight Loss Journey: புரதச்சத்து கொண்ட உணவுகள்
வீட்டில் சமைத்த உணவுகளையே அவர் பெரும்பாலும் உட்கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக சிக்கன், முட்டை, பன்னீர், சோயா சங்க்ஸ் என புரதச்சத்து நிறைந்த உணவுகளையே அவர் அதிகமாக சாப்பிட்டுள்ளார். தினமும் 2000 கலோரிகளை உட்கொண்டுள்ளார். அதிலும் கொழுப்பு குறைவான உணவுகளையே உட்கொண்டுள்ளார். தினமும் 3-4 லிட்டர் தண்ணீரை குடித்துள்ளாராம்.
பலரும் உடல் பருமனை கொண்டு கேலிக்குள்ளாக்கியதில் இருந்து கடும் முயற்சிகளை மேற்கொண்டு அந்த பெண் உடல் எடை குறைத்துள்ளார். தற்போது பலமாகவும், ஆரோக்கியமாகவும் மாறியுள்ளார். அதாவது உறுதிப்பாடு, ஒழுக்கம் ஆகியவை சாதிக்க முடியும். பொறுமை, ஆராய்ச்சி, நிலைத்தன்மை மூலம் அவர் பல வருட வலியை ஒரு வெற்றிக் கதையாக மாற்றியிருக்கிறார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட பதிவு குறித்த தகவல்கள்தான். இவற்றை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 110 கிலோவில் இருந்த பிரபல நடிகர்... 4 மாதங்களில் 32 கிலோவை குறைத்தது எப்படி?
மேலும் படிக்க | 40 நாள்களில் 5 கிலோவை குறைத்த பெண்... ChatGPT உதவியால் எடையை குறைத்தது எப்படி?
மேலும் படிக்க | 40 கிலோ எடை அசால்டாக குறைத்த பெண்! உதவிய ஒரே ஒரு வர்க்-அவுட்..என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ