Home> Health
Advertisement

30 நாட்களில் தொங்கும் தொப்பையை தட்டையாக்கலாம்! ‘இதை’ மட்டும் செய்தால் போதும்..

30 Days Plan For Weight Loss Belly Fat Reduction : 30 நாட்களில் வயிறு தொப்பை குறைக்க, சில பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?  

30 நாட்களில் தொங்கும் தொப்பையை தட்டையாக்கலாம்! ‘இதை’ மட்டும் செய்தால் போதும்..

30 Days Plan For Weight Loss Belly Fat Reduction : பலர் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள் ஒன்று, உடல் பருமன். இப்படி உடல் எடை அதிகமாக இருப்பதால், தொப்பை போட்டு விரும்பிய உடைகளை அணிய முடியாத நிலை ஏற்படலாம். இதை தவிர்க்க, சில திட்டங்களை வகுத்து உங்களுடைய குறைக்கலாம். அதற்கான 30 நாட்கள் திட்டத்தை இங்கு பார்ப்போம். 

டயட்:

30 நாட்களுக்கு மெல்லிய புரதங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். முட்டை, சிக்கன், பன்னீர், மீன் மற்றும் முளைகட்டிய பயிர் ஆகியவை இதில் அடங்கும். 

அதேபோல புரதம் நிறைந்த காய்கறிகளை எடுத்துக் கொள்வது அவசியம். பிரக்கோலி, கேரட், பீன்ஸ், கீரை ஆகியவை இந்த பிரிவில் அடங்கும். 

நல்ல கொழுப்பிற்காக சிறிய அளவிலான நட்ஸ் விதைகள், அவகேடோ ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கார்ப்சிற்கு, சிகப்பு அரிசி, ஓட்ஸ், குயினாவோ, மிலட்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம். மேலும் உடலை நீர் சத்துடன் வைத்துக்கொள்ள 3-4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக வெந்நீர் குடிக்க வேண்டும். 

சாப்பிடக்கூடாதவை..

30 நாட்களுக்கு சர்க்கரையை எடுத்துக் கொள்ளக் கூடாது. டீ காபி குடித்தாலும் அவற்றை சர்க்கரை இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். 

வெள்ளை அரிசி சாப்பாடு, மைதா கலந்த உணவுகள், பொறித்த உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். 

பாக்கெட்ல இருக்கும் பொருட்கள், பதப்படுத்திய பொருட்கள், கூல் ட்ரிங்ஸ் ஆகியவற்றை தவிர்க்கவும். மதுப்பழக்கத்தையும் விட்டுவிடுங்கள். 

வொர்க் அவுட்: 

30 நாட்களில் உடல் எடையை குறைக்க ஒர்க்கவுட் செய்வதும் மிகவும் அவசியம். எனவே, வாரத்தில் 5-6 நாட்கள் வரை வொர்க் அவுட் செய்யலாம். காலையில் 10 நிமிடம் நடை பயிற்சி, stretching, யோகாசனம் உள்ளிட்டவற்றை வெறும் வயிற்றில் செய்யலாம். 

HIIT உடற்பயிற்சிகள்: 

இந்த உடற்பயிற்சிகளை 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். ஒருவரை உடற்பயிற்சிக்கும் இடையே 30 வினாடிகள் பிரேக் எடுத்துக் கொள்ளலாம். 

Jumping jacks
Mountain climbers 
High knees
Burpees
Plank Jacks உள்ளிட்டவற்றை செய்யலாம். 

பலத்திற்கான உடற்பயிற்சி: இதனை 15-20 நிமிடங்கள் வரை செய்யலாம் 

Squats 
Lunges
Push-ups
Russian Twists 
Bicycle Crunches
Planks (30 வினாடிகள் அல்லது 1 நிமிடம்) இவற்றை செய்யலாம். 

வாழ்வியல் மாற்றங்கள்: 

தினமும் 7-8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். சரியாக தூங்கவில்லை என்றால் தொப்பை போடும்.

மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, ஜர்னல் எழுதுவது, தியானம் செய்வது, மூச்சுப்பயிற்சி செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். 

உறங்க செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் பின்னரே முடித்து விட வேண்டும். 

வாரத்தில் இரு முறை உங்கள் இடுப்பினாக்களத்தை அளவெடுத்து அல்லது போட்டோ எடுத்து வைத்து மாற்றத்தை அளவிட்டுக்கொள்ளவும்.

கிரீன் டீ அசியமா?

பலர், டயட் இருக்க வேண்டும் என்றால் கிரீன் டீ குடிக்க வேண்டுமா என்ற சந்தேகத்தில் சுழற்கினர். நீங்கள் வேண்டுமானால் கிரீன் டி-யை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இதன் வேலை, உங்களுக்கு அதீத பசி ஏற்பட விடாமல் செய்து வயிறை முழுமையாக உணர செய்வதுதான். எனவே, சாப்பிட்ட பிறகும் பசி எடுக்கும் நேரத்தில் இதனை குடிக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? பயிற்சியாளர் சொல்லும் 20 டிப்ஸ்!

மேலும் படிக்க | வெயிட் லாஸ் செய்த லாஸ்லியா-உதவிய ஒரு பழம்! நீங்களும் சாப்பிட்டு பாருங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More