யூரிக் அமிலத்தை வேகமாய் குறைக்க உதவும் சூப்பர் பானங்கள்
Sripriya Sambathkumar
Jul 08, 2025
Sripriya Sambathkumar
யூரிக் அமில அளவு உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் கீல்வாதம், மூட்டு வலி, சிறுநீரகக் கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
பானங்கள் யூரிக் அமில அளவை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கிரீன் டீ கிரீன் டீயில் இருக்கும் கெடெசின் என்ற ஆண்டிஆக்சிடென்ட் உடலில் உள்ள யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி அதை குறைக்க உதவுகின்றது.
வெள்ளரி வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இது யூரிக் அமிலம் உட்பட உடலில் உள்ள நச்சுக்கள் வேகமாக வெளியேற உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர் ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அசிடிக் அமிலம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதை குடிப்பது யூரிக் அமில பிரச்சனையை குறைக்க உதவும்.
எலுமிச்சை நீர் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு சிறுநீரக ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது யூரிக் அமில அளவை குறைக்க உதவுகிறது.
தண்ணீர் யூரிக் அமில நோயாளிகள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள நச்சுகளை வேகமாக அகற்ற உதவுகிறது.
பொறுப்பு துறப்பு அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.